உத்தமவில்லனிலும் பத்து அவதாரம் எடுக்கும் கமல்

utttகமல் ஏற்கெனவே ‘தசாவதாரம்’ படத்தில் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது நடித்திருக்கும் ‘உத்தமவில்லன்’ படத்திலும் 10 அவதாரங்கள் எடுத்திருக்கிறார் கமல்.

உத்தமவில்லனில் கமல் பத்து அவதாரமா? டிரைலரை பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை என்று அனைவரும் கேட்பது தெரிகிறது. இந்த படத்தில் அவர் 10 வேடங்களில் நடிக்கவில்லை. ஆனால், இப்படத்திற்கு கதையாசிரியர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர், இசை ஆலோசகர், உதவி இயக்குனர், இரண்டு விதமான கெட்டப்புகள் என பத்து அவதாரங்களை எடுத்துள்ளார் கமல்.

இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் உருவான ‘பாபநாசம்’ படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் கமலுடன் கௌதமி இணைந்து நடித்துள்ளார்.

-http://123tamilcinema.com