‘நாங்கள் எங்கும் உள்ளோம்’: ஹரியானா அரசு இணையதளத்தை ஹேக் செய்த ஐஎஸ்ஐஎஸ்

isis-india2சன்டிகர்: ஹரியானா அரசு இணையதளத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஹேக் செய்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹரியானா அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இணையதளமான www.scertharyana.in கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ஹேக் செய்யப்பட்டது.

அரசு இணையதளத்தை ஹேக் செய்த அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் கொடி அடங்கிய படத்தை போட்டு அத்துடன் ஐஎஸ்ஸால் ஹேக் செய்யப்பட்டுள்ளது; நாங்கள் எங்கும் உள்ளோம் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த இணையதளம் சில மணிநேரம் வேலை செய்யாமல் இருந்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் இந்த ஹேக்கிங் விவகாரம் குறித்த விசாரணை குர்காவ்ன் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து குர்காவ்ன் ஏடிசி வினய் பிரதாப் சிங் கூறுகையில், ஹரியானா அரசிடம் இருந்து ஹேக்கிங் குறித்த புகார் வந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் எந்த வெப் லிங்குகளை பயன்படுத்தி ஆன்லைனில் அந்த தகவலை வெளியிட்டது என்பதை கண்டறியும் வேலை நடந்து வருகிறது என்றார்.

http://tamil.oneindia.com

TAGS: