கள்ள நோட்டா? நல்ல நோட்டா?… கண்டறிய முடியாத அளவுக்கு துல்லியமாக அச்சடிக்கும் “ஐ.எஸ்.ஐ”!

indian currencyடெல்லி: கள்ள நோட்டுக்களின் புழக்கத்தைத் தடுக்க நாடு முழுவதும் காவல்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தி விடலாமா என்ற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது. போலி ரூபாய் நோட்டு தொடர்பான பல வழக்குகளை கையாண்டு கொண்டுள்ள டெல்லி காவல்துறையினர் இதுகுறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளனர்.

 

அதில், “உண்மையான நோட்டுக்கும், கள்ள நோட்டுக்கும் இடையே வித்தியாசமே தெரியாத அளவுக்கு மிகத் துல்லியமாக அவற்றைத் தயாரிக்கின்றனர்” என்று கூறியிருந்தனர்.

இந்த கள்ள நோட்டுக்கள் பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்துதான் வருகிறது. மேஜர் அர்ஷத் கான் மற்றும் கர்னல் அலி என்ற இரு அதிகாரிகள்தான் இதைக் கட்டுப்படுத்தி வருகின்றனர் என்றும் உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இருவரையும் நிர்வகிப்பவர் அப்தாப் பக்தி என்பவர் ஆவார். 2010 முதல் பக்தியின் கீழ்தான் இந்த இரு அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கும்பல் மூலம் வெளியாகும் கள்ள நோட்டுக்கள் ஆண்டுக்கு ஆண்டு மேலும் பொலிவுடன் தயாரிக்கப்பட்டு வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதுதான் நமது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஐஎஸ்ஐ அதிகாரிகள்: மேஜர் அர்ஷத் கானும், கர்னர் அலியும், கடந்த 5 வருடமாக கள்ள நோட்டுக் கும்பல் பிரிவின் நிர்வாகிகளாக உள்ளனர். இவர்களுக்கு தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்த 2 பேர் உதவியாக உள்ளனர்.

தாவூத் கும்பல் ஆட்கள்: பக்தி இக்கும்பலின் தலைவர் போல செயல்படுகிறார். இவர்களுக்கு மேலே பாபு கெய்தான் என்ற தாவூத் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உள்ளார்.

சிக்கலாகும் கைது: பாகிஸ்தானிலிருந்து இந்தக் கும்பல்கள் செயல்படுவதால்தான் இவர்களைப் பிடிப்பது பெரும் சிக்கலாக உள்ளதாக இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தொழில் சுத்தத்துடன் கள்ளநோட்டுகள்: ஐஎஸ்ஐ நேரடியாக தலையிட்டிருப்பதால் மிகவும் தொழில் சுத்தத்துடன், நேர்த்தியாக இதைச் செய்து வருகின்றனர். மிகச் சிறப்பான பிரிண்டிங்கையும் இவர்கள் வைத்துள்ளனராம்.

ஒரிஜினல் தோத்துச்சு போ: போலி நோட்டுக்களை அச்சடிப்பதற்காக பாகிஸ்தான் கும்பலைச் சேர்ந்தவர்கள் புதிய பிரிண்டிங் மெஷினை கடந்த ஆண்டு வாங்கியுள்ளனராம். மிக மிக துல்லியமாக ஒரிஜினல் நோட்டுக்களைப் போல இதில் அச்சடிக்க முடியுமாம். உண்மையான நோட்டுக்கும், கள்ள நோட்டுக்கும் வித்தியாசமே தெரியாத அளவுக்கு இதில் துல்லியமாக அடிக்க முடியுமாம்.

புதிய தொழில்நுட்ப யுக்திகள்: கள்ள நோட்டு தொடர்பாக தொடர்ந்து இடைவிடாமல் ஐ.எஸ்.ஐ பணியாற்றி வருகிறது. இதில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் அவை உடனடியாக பாகிஸ்தானுக்கு வந்து விடுமாம்.

 

கனகச்சித வேலை: 6 மாதங்களுக்கு முன்பு வரை கள்ள நோட்டுக்களில் 3 முக்கியமான வேறுபாடுகளைக் காண முடிந்தது. ஆனால் தற்போது அவற்றைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியமாகி விட்டது.

காப்பியோ காப்பி பர்பெக்ட் காப்பி: காகிதத்தின் கடினத்தன்மை முன்பு ஒரு முக்கியத் தவறாக இருந்தது. தற்போது அதை சரி செய்து விட்டனர் கள்ள நோட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள். வாட்டர் மார்க்கையும் அவர்கள் உடைத்து விட்டனர். ரூபாய் நோட்டுக்கு நடுவே காணப்படும் கோடும் கூட இப்போது துல்லியமாக காப்பி அடிக்கப்படுகிறதாம்.

வங்கிகள் மூலமாக: வங்கிகள் மூலமாகத்தான் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுகிறார்கள் இக்கும்பலைச் சேர்ந்தவர்கள். அதுதான் எளிமையானதாக உள்ளது. பெருமளவிலான கள்ள நோட்டுக்களை வங்கிகள் மூலமாக புழக்கத்திற்கு விடுகிறார்கள். தாய்லாந்து, வங்கதேசம் வழியாக இந்த கள்ள நோட்டுக்கள் இந்தியாவுக்குள் புகுகின்றன.

 

கூட்டமான நேரத்தில் குளறுபடி: வங்கிகள் என்னதான் கண் கொத்திப் பாம்பாய் இருந்தாலும் கூட கள்ள நோட்டுக் கும்பல்கள் அதிலும் புகுந்து விடுகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களையும், வங்கிகளையும் குறி வைத்து அப்போது கள்ள நோட்டுக்Kளுடன் வங்கிகளுக்குள் புகுந்து விடுகிறாரக்ள். கூட்டம் அதிகமாக இருப்பதால் வங்கி ஊழியர்கள் தீவிரமாக ரூபாய் நோட்டுக்களை சோதனை செய்வதி்ல்லை என்பதால் இந்த உத்தியாம்.

http://tamil.oneindia.com

TAGS: