நிலம் கையகப்படுத்தும் மசோதா ஓட்டெடுப்பில் ஆஜராகாத எம்.பி.க்களிடம் மோடி கண்டிப்பு

modi_gandhi_001டெல்லியில் நேற்று காலை பா.ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஓட்டெடுப்பின்போது, சபையில் ஆஜராகாத 25 எம்.பி.க்களின் பெயர்களை வெங்கையாநாயுடு வாசித்தார். அவர்கள் எழுந்து நின்றனர். மத்திய மந்திரி பபுல்சுப்ரியா, சத்ருகன்சின்கா, வருண்காந்தி, பூனம்மகாஜன், பிரீதம்முண்டே (மறைந்த கோபிநாத்முண்டே மகள்) ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.

சபைக்கு வராததற்கு காரணமாக, 2 உறுப்பினர்கள் துக்க சம்பவத்தையும், சுபநிகழ்ச்சியையும் தெரிவித்தனர். மற்றவர்களால் தகுந்த காரணத்தை சொல்ல முடியவில்லை. அவர்களை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக கண்டித்தார்.

வருங்காலத்தில் பாராளுமன்றம் மற்றும் மேல்-சபையில் முக்கிய மசோதா தாக்கல் மற்றும் விவாதங்களின்போது, உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

-http://www.nakkheeran.in

TAGS: