சென்னை: தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் வரும் 24ம் தேதி நடத்த தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இருதரப்பு மீனவர்களும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையிலும், மே மாதம் கொழும்புவிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து 3வது கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த இருதரப்பும் முடிவு செய்தது.
ஆனால் இதற்கான தேதியை இறுதி செய்வதில் முடிவு ஏற்படவில்லை-. இந்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் ஞானதேசிகன் வெளியுறவு செயலாளருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் வரும் 24ம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இலங்கை சென்று வந்துள்ள நிலையில், இருநாட்டு மீனவர்களும் சந்தித்து பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinakaran.com
மீனவர்களே பேசித் திர்க்க வேண்டும் என்றால் அரசாங்கம் என்ன பு…… கிட்டு இருக்கா ?