ஐ.எஸ் பிடியில் 39 இந்தியர்கள்? துருக்கியிடம் உதவி கோரும் இந்தியா

isis-india2ஐ.எஸ் பிடியில் சிக்கியுள்ள 39 இந்தியர்களை மீட்க உதவுமாறு துருக்கிக்கு, இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில், வேலை செய்து வந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ளனர்.

இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மெவ்லுட் கவுசொக்லுவுடன்(Mevlut Cavusoglu) பேசிய சுஷ்மா சுவராஜ், ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து 39 தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாத மிரட்டல்களை எதிர்கொள்வது பற்றியும் விவாதித்துள்ளார்.

அப்போது சுஷ்மாவுக்கு பதிலளித்த கவுசொக்லு கூறுகையில், இந்தியர்கள் கடத்தப்பட்டது பற்றி இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்படாதவை என்று கூறியுள்ளார்.

ஆனால், கடந்த வருடம் மொசூலில் இந்திய பணியாளர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது, அவர்கள் எங்குள்ளனர் என்பது பற்றிய தகவல்களை துருக்கி நாடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் மோடி,துருக்கி நாட்டிற்கும் செல்வது தொடர்பாக கலந்தாலோசித்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: