சென்னை: கர்நாடகா அணைகட்டும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் தொடங்கியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவசாய அமைப்புகள், மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பேசிய தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு விவசாயிகள் நடத்திய போராட்டங்களே காரணம் என்றனர். தற்போது காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேகதாது, ராசி மடல் ஆகிய இடங்களில் காவிரியின் குறுக்கே அணைக்கட்ட முடிவு செய்துள்ள கர்நாடகா அரசு அதற்காக நிதி ஒதுக்கிடும் செய்துள்ளது. அணைகள் கட்டப்பட்டு மேட்டுர் அணைக்கு நீர்வரத்து தடுக்கப்பட்டால் டெல்டா மாலட்டங்கள் பாலைவனமாக மாறும் என்பதை விவசாயிகள் தரப்பு புகாராகும்.
-http://www.dinakaran.com