2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை விவசாயிகள் பலனடையும் வகையில் மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை விரும்பாத மாநிலங்கள், தாராளமாக முந்தைய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்தலாம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வானொலி நிகழ்ச்சியான மான்கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு அவர் நிகழ்த்திய உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் மூலம், விவசாயிகள் பலனடைய வேண்டும் என்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில், ஏராளமான தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆகையால், இந்த தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தவறான பாதையில் சென்று விடாதீர்கள். என்னை நீங்கள் நம்புங்கள். உங்களது நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறினார்.
-http://www.dinamani.com
முக நூலில் இவரை வைத்து பெரிய அளவில் காமடி நடக்குது, இவருக்கு அது தெரியுமா அல்லது தெரியாது மாதிரி நடிகிறாரா.