நடுரோட்டில் ஊசலாடிய வாலிபரின் உயிர்! ஓடி வந்து முதலுதவி கொடுத்த அமைச்சரின் நல்லுள்ளம்

minister_helped_001விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபர் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டக் கழக செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

இவர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் மீண்டும் அவர் முதல்வராக வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மேட்டுச்சாலை என்ற இடத்தில் அரசு பேருந்தில் அடிபட்டு சாலை ஓரத்தில் ஒரு வாலிபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை கண்டதும் அமைச்சர் விஜயபாஸ்கர், உடனே தனது காரை நிறுத்த சொல்லி ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை சென்று பார்த்த அவர் உடனடியாக அவசர ஊர்தியை அழைத்துள்ளார்.

மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபருக்கு மருத்துவரான அமைச்சர் தனது காரில் இருந்த மருந்துகளை கொண்டு மனிதாபிமானத்துடன் முதலுதவி செய்துள்ளார்.

ஆனால் அவசர ஊர்தி வர வெகு நேரமானதால், தன் பாதுகாப்பிற்காக வந்த வாகனத்தினை உடனே அழைத்து அந்த வாலிபரை அதில் ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர், அந்த வாலிபருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அங்கு வந்த வாலிபரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், தனது சட்டை பையில் இருந்து ரூபாய் 5 ஆயிரத்தை எடுத்து நிதி உதவியும் செய்தார்.

இதன்பின் மரணத்தின் பிடியில் இருந்த வாலிபரை காப்பாற்றிய மன நிறைவுடன் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சரின் இந்த மனிதாபிமானமிக்க செயலைக் கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டி சென்றனர்.

-http://www.newindianews.com

TAGS: