சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை ஸ்ரீதேவியை நடிக்க வைக்கும் முயற்சியில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஈடுபட்டிருப்பதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. பாரதிராஜா இயக்கத்தில் கமல் – ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. 2 கிராமத்துப் படங்களைக் கொடுத்த பாரதிராஜா, 3வதாக கொடுத்த சிட்டி சப்ஜெக்ட்தான் இந்த சிகப்பு ரோஜாக்கள். கடந்த 1978ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமல் பெண்களைக் கொலை செய்யும் சைக்கோவாக நடித்திருந்தார். இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் இனிமையாக அமைந்திருந்தன. வெற்றிப்படமான இதன் இரண்டாம் பாகத்தை தற்போது பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலான ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். எனவே ‘சிகப்பு ரோஜாக்கள்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க அவர் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதை விட முக்கியமானது பாரதிராஜாவே இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அவரும், ஸ்ரீதேவியும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்கிறார்கள்.
பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலமாகத் தான் ஸ்ரீதேவி தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி அப்ப கமல் வேடத்தில் யாருன்னு எதிர்பார்ப்பு வருதில்ல.. அந்த வேடத்தில் விசாகன் என்பவர் நடிக்கவிருக்கிறாராம். இவர் ஹாலிவுட்டில் பயிற்சி பெற்றவராம்.
-http://tamil.oneindia.com