ராஜஸ்தானை சேர்ந்த “Water man of India” என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங் என்பவருக்கு, உயரிய விருதான ‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பு, ‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ பரிசை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
இந்த பரிசை இந்த ஆண்டு, ராஜஸ்தானை சேர்ந்த ‘வாட்டர் மேன் ஆப் இந்தியா’ என்று அழைக்கப்படும் 1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதியை செய்து கொடுத்த ராஜேந்திர சிங்கிற்கு வழங்கியுள்ளனர்.
மருத்துவ துறையில் பணியாற்றிவந்த ராஜேந்திர சிங், தண்ணீருக்காக மக்கள் படும் அவலங்களை பார்த்து, மக்களுக்கு தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று இப்பிரச்சனைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
தண்ணீர் தேவையினை அவர் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி பூர்த்தி செய்து வருவதோடு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் உதவியுடன் மழைநீரை சேகரிப்பது, நீர்நிலைகளை புணரமைப்பது மற்றும் நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய முறையினை பயன்படுத்தி நீர்வளத்தை பெருக்குதல் ஆகிய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.
பின்னர் ஏரிகள், ஆறுகள், வெள்ளத்தடுப்பு என தன் கவனத்தை திருப்பி செயல்பட தொடங்கினார்.
இவ்வாறு கிராமப்புற இந்தியாவின் நீர் பாதுகாப்பை வலுவாக்கும் விதமாக, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ராஜேந்திர சிங் மேற்கொண்டு வரும் கடின முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர சிங் இதுபற்றி பேசுகையில், தற்போது எங்களுடைய குறிக்கோள் மிகவும் உயர்வானது.
நீர் இந்த நூற்றாண்டின் மிகபெரும் சுரண்டலாக உள்ளது. இவை தடுக்கப்பட வேண்டும்.
மேலும், தண்ணீர் மீதான போரை அமைதியாக மாற்ற வேண்டும், இதுவே என்னுடைய இலக்கு என்று கூறியுள்ளார்.
-http://www.newindianews.com
நல்ல வேளை சுருட்டுவதற்கு ‘அரசியல்வாதிகள்’ இல்லை!