பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன

riபோபால்: ”கடந்த இரு ஆண்டுகளாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த தடயவியல் துறை தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜூ பேசியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; இது, கவலைக்குரிய விஷயம். ஆனாலும், முன்பு, தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கு பெண்கள் தயங்கினர்.

தற்போது, அந்தநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள், தைரியமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளிக்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுப்பதே, பா.ஜ., அரசின் முக்கிய நோக்கம். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பெண்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

-http://www.dinamalar.com

TAGS: