சமீபத்தில் ஜெய் நடித்து வெளியான எந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
இவரின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த வலியவன் படம் மக்கள் எதிர்பார்த்தபடி பொழுதுபோக்கு படமாக அமையவில்லை.
இந்த வாரம் திரையரங்குகளில் இப்படம் இருப்பதே சந்தேகம் தான் என்கிறார்கள் . வலியவன் படத்துக்கு மட்டும் ஜெய்க்கு ரூ. 3 கோடியும், சரவணனுக்கு ரூ. 3 கோடியும் சம்பளம் பேசப்பட்டு முழுக்க வாங்கியும் விட்டார்களாம்.
இதில் அடுத்தது இவரை கமிட் செய்கிற தயாரிப்பாளர்களிடம் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.
ஒரு பிரபல தயாரிப்பாளர் இது பற்றி கூறுகையில், “இவர் என்ன சின்ன அஜித் த்தா, தன்னுடைய பட விளம்பரத்துக்கு வர மறுக்கிறார்.
இவருக்கு இங்கு பெரிய மார்க்கெட்டே இல்லை அப்படி இருக்க எப்படி கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பது என்றும் இப்படியே செய்தால் ஜெய் இருக்கிற மார்க்கெட்டை கூட இழப்பது உறுதி எனவும் கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com