கிரானைட் முறைகேடு புகார்களின் உண்மைத் தன்மை – சகாயம் தலைமையிலான குழு ஆய்வு

sagayam-dமதுரை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் உண்மைத் தன்மை குறித்து சகாயம் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை 600 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள், காவல்துறையின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. கிரானைட் முறைகேடு புகார்களின் உண்மைத் தன்மை – சகாயம் தலைமையிலான குழு ஆய்வு அதன்பேரில் மதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மீதமுள்ள புகார்களில் குற்றத்திற்கான முகாந்திரம் குறித்து சகாயம் குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் போதுமானவையாக இருக்கிறதா என்றும் அக்குழு ஆலோசனை செய்து வருகிறது.

மதுரை: கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சகாயம் குழு பரிந்துரைத்த புகார்களின் அடிப்படையில் பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது மேலும் 11 வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி திருவாதவூர் மற்றும் கீழையூர் பகுதிகளில் நிலங்களை மோசடியாகப் பதிவு செய்தது மற்றும் வாங்கிய நிலத்துக்குப் பணம் தராமல் மோசடி செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது கீழவளவு மற்றும் ஒத்தக்கடை காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

palanichamyபி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது கொட்டும் புகார்கள் – மேலும் 11 வழக்குகள் பதிவு மேலும், ஒத்தக்கடையை அடுத்த புதுதாமரைப்பட்டி ஜான்கிட் நகரில் காவலர் குடியிருப்புகள் மற்றும் குண்டாங்கல் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புகளை மிரட்டி வாங்கியது, ஆக்கிரமிப்பு செய்தது என பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சகாயம் குழு பரிந்துரைத்த புகார்களின் அடிப்படையில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் 41 வழக்குகள், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 30 வழக்குகள் என இதுவரை மொத்தம் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-http://tamil.oneindia.com

TAGS: