சர்வதேச கீதை போட்டி: முதல் பரிசு பெற்று சாதனை படைத்த இஸ்லாமிய பள்ளி மாணவி

bhagavad_gita_001மும்பையில் மரியம் சித்திக் என்ற 12 வயது இஸ்லாமிய பள்ளி மாணவி சர்வதேச கீதை போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.

இஸ்கான் அமைப்பு சர்வதேச அளவில் பகவத் கீதை பற்றிய போட்டி ஒன்றை நடத்தியுள்ளது.

இதில் கலந்து கொள்ள மும்பையை சேர்ந்த இஸ்லாமிய பள்ளி ஒன்றின் மாணவ மாணவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த இஸ்லாமிய பள்ளியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி மரியம் சித்திக், 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார்.

இது பற்றி மரியம் கூறுகையில், எனக்கு எப்போதும் மதங்களை பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தேன்.

இதற்கு எனது குடும்பமும் ஆதரவு அளித்ததுடன் உதவியாகவும் இருந்தது. அதிகமாக மதநூல்களை படிக்கும்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது.

மேலும், அது நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான மதம் மனித நேயம் தான் என தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: