மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடைமாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா: பரபரப்பு தகவல்

smriti_irani_001மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிரிரு இரானி இரண்டு நாள் விடுமுறைக்காக குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் கோவாவில் ஒரு துணிக் கடைக்கு சென்று ஷொப்பிங் செய்தபோது, உடையை தெரிவு செய்து உடைமாற்றும் அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த உடைமாற்றும் அறையில் ரகசிய கமெரா இருந்ததை கண்டுபிடித்த ஸ்மிருதி இரானி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இதுபற்றி பா.ஜ.க எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ (Michael Lobo) கூறுகையில் , மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது உண்மை தான் என்று உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக தற்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ள பொலிசார், அந்த அறையில் இருந்த ரகசிய கமெரா மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-http://www.newindianews.com

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: மத்திய அமைச்சரின் புகாரை அடுத்து 4 பேர் கைது

  • கோவாவில் துணிக் கடையில் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கடையின் வெளியே நின்றிருக்கும்  பாஜக எம்எல்ஏக்கள் மைக்கேல் லோபோ, பிரமோத் சாவந்த்.

    கோவாவில் துணிக் கடையில் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கடையின் வெளியே நின்றிருக்கும்  பாஜக எம்எல்ஏக்கள் மைக்கேல் லோபோ, பிரமோத் சாவந்த்.

கோவா மாநிலத்தில், ஒரு துணிக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த புகாரின் பேரில், ஊழியர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் (வடக்கு) உமேஷ் காவ்ங்கர் கூறியதாவது:

மத்திய அமைச்சர் ஸ்மிருதி, கோவா வந்தபோது ஒரு துணிக்கடைக்குச் சென்றார். அப்போது உடைமாற்றும் அறைக்குச் சென்ற அவர், அங்கு ஒரு துளையில் தொங்கவிடப்பட்டிருந்த ரகசிய கேமராவைக் கண்டறிந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனது கணவர் ஜுபின் இரானியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்மிருதி இரானி அளித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மைக்கேல் லோபோவும், போலீஸாரும் அங்கு கேமரா இருந்ததை உறுதி செய்தனர்.

கடையில் மேலாளர் அறையில் இருந்த கணினியுடன் அந்த கேமரா இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கேமராவில் உள்ள பதிவுகள் அனைத்தையும் ஆராய்ந்தபோது அதில் பல பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து இரானியுடன், மற்றொரு பெண்ணும் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து அந்தக் கடைக்கு போலீஸார் சீல் வைத்து, கடை ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.

மேலும் கோவாவில் உள்ள அனைத்து துணிக் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளிலும் கேமரா நிறுவப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் உமேஷ்.

இதுகுறித்து கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் தெரிவித்ததாவது:

தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரில் உள்ளேன்.

கோவாவில் உள்ள துணிக்கடைக்குச் சென்றிருந்த அமைச்சர் ஸ்மிருதிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அறிவேன்.

இதுபோன்ற அருவருக்கத்தக்க காரியங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீஸாரை அறிவுறுத்தியுள்ளேன் என்றார் முதல்வர்.

-http://www.dinamani.com

TAGS: