![]()
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த படம் சைவம். இப்படம் இந்த வருடத்திற்காக தேசிய விருதில் 2 விருதுகளை தட்டிச்சென்றுள்ளது.
மேலும், இப்படத்தை பார்த்து பலர் சைவத்திற்கு மாறியதாக எ.எல். விஜய்யிடமே கூறினார்களாம். இது போல பல கருத்துக்களை தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இவர் பகிர்ந்துள்ளார்.
இதில் ’ புளூகிராஸ் அமைப்பின் நிறுவனர் சின்னி கிருஷ்ணா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அமலா நாகார்ஜுனுக்கு சொல்ல, அவரும் படத்தைப் பார்த்துவிட்டு மேனகா காந்திக்குத் தெரிவித்தார், மேனகா அவர்கள் படத்தை மிகவும் ஆவலோடு பார்த்துவிட்டு, இந்தப் படத்தைப் பற்றி நரேந்திர மோடிக்குத் தன் கைப்பட கடிதம் எழுதியிருக்கிறார்’ என்று விஜய் கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com


























உண்மையில் என் மனத்தை தொட்டப் படம் இது நிறைய நல்லக் கருத்துக்களை , நாசுக்காக புகுத்தியிருக்கிறார்கள் .
ஆர்பாட்டம் இல்லா திரைப்படம்– இரு விருதுகள் -வாழ்த்துக்கள்