மகா கேவலம்… ஆந்திர வெறியாட்டத்தை உடனடியாக கண்டிக்கத் தவறிய தமிழக திராவிடக் கட்சிகள்!!

andhra-shootoutசென்னை: ஆந்திர போலீஸார் நடத்திய கொலை வெறித் தாக்குதலை உடனடியாக கண்டிக்கத் தவறியுள்ளன தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகள். இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சம்பவம் நடந்து இத்தனை நேரமாகியும் இதுவரை திமுகவிடமிருந்தோ, அதிமுகவிடமிருந்தோ, தேமுதிகவிடமிருந்தோ இன்னும் பிற கட்சிகளிடமிருந்தோ ஒரு கண்டனம் கூட வரவில்லை. பாஜக மட்டும் கருத்துக் கூறியுள்ளது.செம்மரம் வெட்டிக் கடத்தும் கும்பலால் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமே இல்லாமல் மிகக் கொடூரமாக குருவி சுடுவது போல சுட்டுத் தள்ளியுள்ளது ஆந்திர போலீஸ். 20 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து இதுவரை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எதுவும் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளன. தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.டிவிகளிலும் சன் டிவி மட்டுமே ஆரம்பத்திலிருந்தே இந்த செய்தியை காட்டி வந்தது. பிற டிவிகளில் ஒரு சின்ன பிளாஷ் கூட போடவில்லை. நீண்ட நேரம் கழித்தே போட ஆரம்பித்தனர்.முக்கிய கட்சிகள் இப்படி இத்தனை தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வாய் மூடி மெளனம் காப்பது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது. வாய் கிழிய பேசும் தலைவர்கள் கூட கப்சிப் என்று இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமையானது.

செம்மரக் கடத்தலும்… செத்துப்போன அப்புவும்.. தமிழக தொழிலாளர்கள் சீரழியக் காரணமான தாதா!

red-sandersசென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் பிரபலமான தாதா அப்புதான் தமிழகத்தில் செம்மரக்கடத்தல் தொழிலில் முதன்மையாக ஈடுபட்டவர் ஆவர். இவர்தான் அதிக அளவில் தமிழக கூலித் தொழிலாளர்களை ஆந்திராவிற்கு அனுப்பி மரங்களை வெட்டி கடத்தியவர் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செம்மரக்கடத்தல் வழக்கில் கைதானா அப்பு, ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எலும்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

யார் இந்த அப்பு? கம்சானி கோபாலகிருஷ்ண மூர்த்தி என்கிற அன்புசெல்வம் என்கிற அப்பு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுரு குப்பம் மண்டலம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தார்.

தாதா பின்னணி அரசியல் பின்பலம் கொண்ட இவர் மீது கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற 15 வழக்குகள் சென்னை போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரபலப்படுத்திய கொலை சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சென்னகேசவுலு என்பவர் கொல்லப்பட்ட வழக்கு ஆகியவையும் அப்பு மீது பதிவானது. சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலையான அப்பு பின்னர் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார் அப்பு.

செம்மரக்கடத்தல் இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி கொல்லபல்லி வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்ட செம்மரங்களை, அப்பு சட்டவிரோதமாக வாங்கியதாக ஸ்ரீகாளஹஸ்தி போலீஸார் இவரை தேடிவந்தனர். மேலும் இவர் மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு செம்மர கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருந்தன. ஆந்திர போலீஸார் தேடிவரும் செம்மர கடத்தல்காரர் கொல்லம் கங்கிரெட்டிக்கு,அப்பு நெருங்கிய நண்பர் என்றும் போலீஸார் தெரிவித்தனர். சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்புவை சிறப்பு ஆயுதப்படை போலீஸார் சித்தூரில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மரணித்த அப்பு கடந்த ஜனவரி மாதம் எலும்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அப்பு காக்கிநாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திரா சிறையிலேயே உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. செம்மரக்கடத்தலில் அப்பு போட்ட விதைதான் இன்றைக்கு விருட்சமாகி நிற்கிறது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

TAGS: