திருத்தணியில் தமிழக தொழிலாளர்களை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், பின்னர் அவர்களை வனப்பகுதிக்கு கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் 20 பேரில் 8 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் போளுரை அடுத்துள்ள வேட்டகிரிபாளையத்தைச் சேர்ந்த பெருமாள், முருகன், சசி, அர்ஜினாபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன், காளசமுத்திரத்தைச் சேர்ந்த பழனி, முருகப்பாடியைச் சேர்ந்த முனுசாமி மற்றும் மூர்த்தி ஆகிய 7 பேரின் விவரங்கள் தெரிய வந்துள்ளன.
கடந்த திங்கள்கிழமை இந்த கிராமங்களில் இருந்து திருப்பதிக்கு இந்த தொழிலாளர்கள் சென்றுள்ளனர். தமிழக எல்லைப் பகுதியான திருத்தணில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த அவர்களை போலீசார் கைது செய்ததாகவும், பின்னர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அர்ஜினாபுரத்தில் உள்ள மகேந்திரன் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். மகேந்திரன் சகோதரர் மற்றும் அவரது தாயார் கூறுகையில்,
திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருத்தணியில் இருந்து 15 நிமிடம் சென்ற பேருந்தில் இருந்து ஆந்திர போலீசார் அவர்களை இறக்கியுள்ளனர். தப்பி வந்த ஒருவர் இதனை எங்களிடம் தெரிவித்தார்.
மகேந்திரன் சென்னையில் பிளம்பர் வேலை செய்கிறார். வேலை நிமித்தமாகத்தான் சென்றார். உண்மையிலேயே அவர் கடத்தலில் ஈடுபட்டு சுட்டுக்கொன்றால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அதுவரை நாங்கள் விடமாட்டோம் என்றனர்.
-http://www.nakkheeran.in
தமிழர்கள் சுட்டுக்கொலை! சந்திரபாபு உத்தரவின் பேரில்தான் நடந்தது என முன்னாள் எம்.பி. குற்றச்சாட்டு!
ஆந்திர மாநிலம் சேஷாசலம் மலைப் பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சிந்திமோகன், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோலி என்கவுண்டர். திட்டமிட்ட கொலை. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து விசாரணை நடதத வேண்டும் என்றார்.
சந்திரபாபுவின் நேரடி உத்தரவிலேயே 20 தமிழர் சுட்டுப்படுகொலை: ஒய்.எஸ்.ஆர். காங். அதிர்ச்சி தகவல்
திருப்பதி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேரடி உத்தரவில்தான் 20 தமிழரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
20 தமிழர் படுகொலை குறித்து ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் வாசு ரெட்டி வர்மா கூறியுள்ளதாவது:
சந்திரபாபுவின் நேரடி உத்தரவிலேயே 20 தமிழர் சுட்டுப்படுகொலை: ஒய்.எஸ்.ஆர். காங். அதிர்ச்சி தகவல் 20 தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
500 பேர் செம்மரம் வெட்ட வந்ததாக போலீசார் கூறுகிறார்கள். இவர்கள் வரும் போதே போலீசார் ஆந்திர எல்லையில், செக்போஸ்டுகளில் தடுத்து நிறுத்தாதது ஏன்?
இந்த கொலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேரடி ஏற்பாட்டில் நடந்து இருக்கிறது. சந்திரபாபு நாயுடு ஒரு நாளைக்கு முன்பே திருப்பதி வந்து விட்டார். மறுநாள் இரவு 8.30 மணி வரை அங்கு இருந்திருக்கிறார். அவரது ஆலோசனையின் பேரில் தொழிலாளர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உத்தரவின் பேரிலேயே போலீசார் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
ஆந்திரமாநில உள்துறை அமைச்சர், ‘மரம் வெட்டிய தொழிலாளர்கள் ஆயுதங்களால் தாக்கியதாகவும், சுட்டதாகவும் பதிலுக்கு போலீசார் சுட்டதாகவும் கூறி இருக்கிறார். இதற்கு அவர் ஆதாரத்தை காட்ட முடியுமா? என்கவுண்ட்டர் எப்படி நடந்தது என்பதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் நம்மை பகையாளி போல் பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது.
இதற்கான முழுபொறுப்பையும் சந்திரபாபு நாயுடு ஏற்க வேண்டும். இது போலி என்கவுண்ட்டர் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு வாசு ரெட்டி வர்மா கூறியுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.com/news/india/ysrc-seeks-probe-over-tamils-killing-224332.html
இனி தெலுங்கர்கள் தமிழர்களின் நேரடி எதிரி என்று சந்திரபாபு நாய்டு இதன் மூலம் தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுக்க நினைக்கிறார் போலும்!!!