பிரபல கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் உத்தம வில்லன். இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருவுள்ளது. இந்நிலையில் இந்து கடவுளை கமல் தவறாக சித்தரித்துள்ளார் என்று சில அமைப்புகள் கொடு பிடித்தது.
இதை தொடர்ந்து நேற்று ஒரு முஸ்லீம் அமைப்பினரும் தங்கள் ஆதரவை அளித்து கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று போலிஸாரிடம் மனு கொடுத்தனர்.
இதுக்குறித்து கமல் கூறுகையில் ‘ சென்சார் தரப்பு சான்றிதழ் அளித்த பிறகு எந்த தேவைக்காகவும் காட்சிகளை கத்தரிக்க முடியாது. மேலும் பழமையான கம்பர் எழுதிய வரிகளில் இருந்துதான் இதை எடுத்துள்ளோம். இதில் எவ்விடத்திலும் எந்த மதத்தையும் குறிக்கவில்லை’ என கூறியுள்ளார்
மேலும் படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் கூறுகையில் ‘யாருடைய மனதையும், உணர்வுகளையும் புண்படுத்தும்படியாக ‘உத்தமவில்லன்’ படத்தில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடகக் கலைஞருக்கும், தற்கால கலைஞருக்கும் இடையேயான வாழ்க்கைப் பதிவு சார்ந்த படம். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்துவிட்டு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எந்த இடையூறும் இல்லாமல், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
-http://www.cineulagam.com
தமிழ்த் திரைத்துறையில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தை கண்டித்து நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க உண்ணாநிலைப் போராட்டம் !!
இன்று தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த தமிழ்த் திரையுலகில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தை கண்டிக்கும் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. பல்வேறு தமிழ் அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன . இப்போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் என்று சொல்லப்படுவதற்கு காரணம், தமிழ்த் திரையுலகில் தமிழர்களின் ஆளுமை இல்லாத நிலையில், வேற்றின மக்களே இன்னும் ஆளுமை செய்வதை கண்டித்து நடத்தப்படும் முதல் போராட்டம் இதுவே ஆகும்.
ஆனால் இப்படியான போராட்டத்திற்கு தமிழ்த் திரையுலகை சார்ந்த நடிகர்கள் எவரும் வரவில்லை என்பது தான் வேதனையான விடயம். திரைப்படத்துறையில் பணியாற்றும் சிலர் மட்டுமே இப்போராட்டத்தின் உண்மைத்தன்மை அறிந்து இதில் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் கூறும் போது, தமிழ்த் திரையுலகில் பணம் படைத்த தமிழர்கள் யாரும் இல்லாத காரணத்தால் தமிழர்கள் அனைவரும் தமிழர் அல்லாதவர்களின் உதவியைத் தான் நாடி நிற்க வேண்டி உள்ளது . அதனால் தான் தமிழர்கள் யாரும் திரைப்படத் துறையில் தமிழர் அல்லாதவர்களை கண்டிக்க முன்வரவில்லை என்று தன்னுடைய வேதனையை வெளிபடுத்தினார் .
திரைப்படத்துறையில் நுழைந்த பல்வேறு தமிழர் அல்லாதவர்கள் இப்போது அசுர வளர்ச்சி பெற்றுள்ளனர். நாளை அவர்களே தமிழகத்தின் அரசியல் தலைமையை கைப்பற்றக் கூடும். இன்று விஜயகாந்த் எதிர்க் கட்சி தலைவர் என்றால் நாளை விசால் எனும் நடிகர் எதிர்க்கட்சி தலைவராக வருவார் . தொடர்ந்து தெலுங்கர்கள் அரசியல் தலைமைகளை கைப்பற்றினால் தமிழர்கள் எப்போதும் அடிமையாகவே இருக்க நேரிடும் என்ற கருத்து ஆழமாக இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது. தமிழகத்தில் அரசியலில் தமிழர்கள் ஆளுமை செலுத்த முடிவதில்லை, திரைத்துறையில் ஆளுமை செய்ய முடிவதில்லை, வணிகத்தில் ஆளுமை செய்ய முடிவதில்லை. இப்படியாக எல்லா துறைகளிலும் தமிழர்கள் புறக்கணிப்பட்டு, தமிழர் அல்லாதவர்களே தமிழர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கின்றனர். தமிழர்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதை கூட தமிழர் அல்லாதவர்களே முடிவு செய்கின்றனர் .
இந்த அடிமை நிலையில் இருந்து தமிழர்கள் வெளியேற திராவிட கருத்தியலையும் , திராவிட அரசியலையும் , திராவிட வணிகத்தையும் , திராவிட ஆளுமையையும் எதிர்த்து தமிழர்கள் போராடியே ஆக வேண்டும் என்ற கருத்தை வந்திருந்தவர்கள் அனைவரும் முன் மொழிந்தனர். சாதியாக நம்மை பிரித்து இத்தனை காலம் தமிழர்களின் முதுகின் மீது ஏறி பிழைப்பு நடத்தும் திராவிடத்தை தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைத்து விரட்டி அடிக்க வேண்டும் என்ற செய்தியும் ஆழமாக பதியப்பட்டது. தமிழர்கள் இப்போது விழிப்படைந்து விட்டனர் . இனியும் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது என்பதையும் இப்போராட்டம் நமக்கு உணர்த்தி உள்ளது. இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்திற்கு நம் பாராட்டுகள்.
கமல் படம் டாயாரிக்கிரத்தை விட்டு புட்டு பேசாமல் போயி மூட்டை தூக்கி பிழைத்தால் நல்லது ,இவர் படத்தில் எபாடியாவதை சர்ச்சைகளை கிளப்பி விட கூடிய ஒரு அற்புதமான நடிகன் ,அப்படியும் இல்லை என்றால் ஆபாசத்தை புகுத்தி காமத்தை தூண்டிவிடும் ஒரு அற்புதமான நடிகர் ,தேவையா இந்த பொழப்பு யாவருக்கு ,வாழ்க கமல் ,இப்படிக்கு கமல் ரசிகன்