தி.மலையில் 6 தமிழர்களின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை முடிந்தது: உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

andhra-policeஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் 6 பேரின் உடல்களை ஐதராபாத் மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்யும் பணிகள் முடிவடைந்ததையடுத்து, அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பதி வனப்பகுதியில் ஏப்ரல் 7ஆம் தேதி 20 தமிழர்களை ஆந்திர காவல்துறை சுட்டுக்கொன்றது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 14 பேரின் உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுவிட்டன. ஐதராபாத் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி எஞ்சிய சசிகுமார், பெருமாள், முனுசாமி, முருகன், மூர்த்தி, மகேந்திரன் ஆகிய 6 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யும் பணி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. ஐதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் மறுபிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த பணிகள் நடைபெற்றது.

மறுபிரேத பரிசோதனையையொட்டி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

-http://www.nakkheeran.in

TAGS: