பாகிஸ்தானின் முதல் எதிரி இந்தியா தான்: ஹபீஸ் சயீத் கொக்கரிப்பு

51ab86a3-faabஇஸ்லாமாபாத், ஏப். 20- பாகிஸ்தானின் முதல் எதிரி இந்தியாதான் என்றும், ஜிகாதி படையின் அடுத்த இலக்கு இந்தியாதான் என்றும் ஜமாத் உத் தாவா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் முகமது சயீத் கூறியுள்ளான்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் முகமது சயீத், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறான்.

“காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக எங்கள் ராணுவம் என்ன நிலைப்பாடு எடுத்தாலும், முன்னோக்கி நடவடிக்கை எடுத்தாலும், அது புனிதப்போர்தான். பாகிஸ்தானுடன், பாகிஸ்தான் ராணுவத்துடன், பாகிஸ்தான் நிர்வாகத்துடன் சேர்ந்து நாங்கள் அதற்கு உதவுவோம்” என்று சமீபத்தில் ஹபீஸ் கூறியிருந்தான்.

ஹபீஸ் சயீத்தை உலக நாடுகள் தீவிரவாதி என்று அறிவித்து இருந்தாலும், பாகிஸ்தான் அவனை பாதுகாத்து வருகிறது. ஹபீஸ் பாகிஸ்தானில் பேரணிகள் நடத்துவது, பொதுஇடங்களில் சுற்றுவது என சர்வசாதாரணமாக சுற்றுகிறான். இந்தியா பலமுறை கண்டனம் தெரிவித்தும், பாகிஸ்தான் காதில் வாங்காமல் அவனை வெளியில் சுற்றவிட்டு உள்ளது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாத முகாம்களை வைத்து உள்ளான் என்றும் உளவுத்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவும் எச்சரிக்கை தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் பெஷாவரில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஹபீஸ் முகமது சயீத், பாகிஸ்தானுக்கு இந்தியாதான் முதல் எதிரி என்றும், இந்தியாவுக்கு எதிரான புனிதப்போரை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

“ஜிகாதி படையால் அமெரிக்கா மற்றும் ரஷியா தலைமையிலான படைகள் வீழ்த்தப்படும். ஜிகாதி படைகளின் அடுத்து இலக்கு இந்தியாவும், இஸ்ரேலும்தான் என்றும் என்று சயீத் கூறியுள்ளான்.

-http://www.maalaimalar.com

TAGS: