ஆந்திர சம்பவம்: முதல் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்

andhra-policeஆந்திர மாநிலம், திருப்பதி அருகே சேஷாசலம் வனப் பகுதியில்  போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 20 பேரின் முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையை, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில், அந்த மாநில அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது.

ஹைதராபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு  வந்தது.

அப்போது ஆந்திர அரசு, கடந்த 7ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கான இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை இன்னமும் வந்து சேரவில்லை என்று நீதிபதிகளுக்கு அரசின் சார்பில்  தகவல் தெரிவிக்கப்பட்டது.

22}இல் மறு பிரேத பரிசோதனை அறிக்கை: இதையடுத்து,  மறு பிரேத பரிசோதனை அறிக்கையை வரும் 22ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அறிவுறுத்துமாறு, தலைமைப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சேஷாசலம் வனப் பகுதியில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிகுமாரின் மனைவி முனியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆந்திர சிறப்பு பாதுகாப்புப் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சசிகுமார் உள்பட 6 பேரின் உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்யுமாறு, இந்த வழக்கில் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

-http://www.dinamani.com

TAGS: