ராகவா லாரன்ஸை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்

ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘காஞ்சனா 2’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் எதிர்பார்த்ததைப் போல நல்ல வசூல் செய்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் ‘காஞ்சனா 2’ படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருக்கிறதாம். இதனிடையே நடிகர் விஜய், ராகவா லாரன்சை பாராட்டியுள்ளார்.

விஜய்யும், ராகவா லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள். காஞ்சனா – 2 படத்தின் ஹிட் பற்றி கேள்விப்பட்ட விஜய், ராகவா லாரன்ஸை தனது வீட்டிற்க்கு அழைத்து மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நல்ல நண்பர் வாழ்த்தால் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘காஞ்சனா – 2’ படத்திற்காக ராகவா லாரன்ஸை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com