திருப்பதி: செம்மரக் கடத்தலில் தொடர்பிருப்பதாக கூறி தமிழகம் மற்றும் ஆந்திராவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரை கைது செய்ய ஆந்திரா போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை ஆந்திரா போலீஸ் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த சிலரை கைது செய்துள்ளது ஆந்திரா போலீஸ். மேலும் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் ரூ. 22 கோடி மதிப்புள்ள 11 டன் செம்மரக் கட்டைகளை நேற்று ஆந்திரா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மர குடோன் சவுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமானது. இந்த சவுந்தர்ராஜன் மியான்மர் நாட்டு குடியுரிமை பெற்றவர் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் எனவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த முன்னாள் அமைச்சரைக் கைது செய்யவும் ஆந்திரா போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் மற்றும் ஒரு தமிழக முன்னாள் அமைச்சர், ஆந்திர முன்னாள் அமைச்சர் ஆகியோரும் விரைவில் இந்த செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆந்திரவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கும் முன்னாள் அமைச்சர்தான் முதலில் கைது செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகள் பலரது தலையையும் செம்மரக் கடத்தல் வழக்கில் உருட்டிவிடுவது என ஆந்திரா போலீஸ் முடிவு செய்துள்ளது.
-http://tamil.oneindia.com


























எய்தவர்கள் எங்கோ இருக்க, பாவம் அம்புகள் பலியாகின. முதலைகள் தப்பிபதற்கு சிறிய மீன்கள் பலிக்கிடவாகக்கப்பட்டனர்கள் !
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!