அமெரிக்கா வாழ் தமிழருக்கு பத்திரிகை துறைக்கான புலிட்சர் விருது

pulitzer_prize_001தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு சர்வதேச புலிட்சர் (Pulitzer prize) விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவ துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி கோவையை சேர்ந்த பொறியாளர் பழனி குமரன் ஆய்வு நடத்தியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) சமீபத்தில் ‘மெடிகேர் அன்மாஸ்க்ட்’ (Medicare Unmasked) என்ற பெயரில் அந்த புலனாய்வு தொடர்களை வெளியிட்டது.

அதில் அமெரிக்காவில் மருத்துவத் துறை, மருத்துவக் காப்பீடு போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து வெளியிட்டது அந்த பத்திரிகை.

இது தொடர்பான லட்சகணக்கான மருத்துவ கோப்புக்கள் அடங்கிய மென்பொருளை இவர் உருவாக்கியுள்ளார். இதற்காக பொறியாளர் பழனி குமரனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: