தி.க.வை தடை செய்க.. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருக: சு.சுவாமி ஆக்ரோஷம்

subramanian-swamy23-600.டெல்லி: பிராமணர்கள் மீது, தி.க.வினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறி கண்டித்துள்ள பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்காக, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்று எச்சரிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில், பிராமணர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து சு.சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.க.வை தடை செய்க.. தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருக: சு.சுவாமி ஆக்ரோஷம் பிராமணர்கள் வீடு புகுந்து, தி.க.வினர் தாக்குதல் நடத்தி, புனித நூலை (பூணூல்) அறுத்தெறிந்துள்ளனர். இந்து மத சின்னம் மீதான தாக்குதல் இது.

இதுபோன்ற தாக்குதல்கள் நடக்க காரணம், தமிழகத்தில் திறமையற்ற ஆட்சி நடப்பதுதான்.

எனவே, இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அரசியல் சாசன பிரிவு 256ன்கீழ் தமிழக அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்ற உறுதியான எச்சரிக்கையை மத்திய அரசுவிடுக்க வேண்டும்.

மேலும், தி.க அமைப்பை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ஆனால், சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட 6 பேரும், தி.கவினர் இல்லை, திராவிட விடுதலை கழக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.com

TAGS: