தமிழக மீனவர்கள் மீது இந்திய கரையோர காவல்துறையினர் குற்றச்சாட்டு

fishingஇந்திய மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாகவே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று இந்திய கரையோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சென்னை மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இலங்கை கடற்பரப்புக்குள் சென்றதன் பின்னர் இலங்கை கடற்படையினருக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களுக்கு தாம் பொறுப்புக்கூற முடியாது என்றும் கரையோர காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய மீனவர்களுக்கு இந்திய கரையோரப்படையினர் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றுக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று இடம்பெற்றது. இதன்போதே கரையோர காவல்துறையின் உதவி பணிப்பாளர் நாயகம் கே.ஆர். நியூட்டியல் இதனை தெரிவித்தார்.

இதேவேளை இந்திய மீனவர்கள் ஒருபோதும் இந்திய கடற்பரப்பில் வைத்து தாக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-http://www.tamilwin.com

TAGS: