பூகம்ப அபாயப்பகுதியில் அமைந்துள்ள 38 இந்திய நகரங்கள்

bookambamபுதுடில்லி: இந்தியாவில் 38 நகரங்கள் நில அதிர்வு ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன. இவற்றில் 60 சதவீத நகரங்கள், பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில், டில்லி உள்ளிட்ட நகரங்கள் பூகம்பத்தினால் பாதிக்கப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.

நேபாளத்தை சீர்குலைத்த கடுமையான பூகம்பம், ஆக்ரா மற்றும் சிலிகுரி நகரங்கள் மற்றும் வட இந்தியாவையும் உலுக்கியது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இமாலய பிராந்தியத்தில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அங்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தியாவில் சில கட்டடங்கள் மட்டுமே, பூகம்பத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. பூகம்பத்தை தாங்கும் வகையில், கடந்த 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிமுறைகள், கடந்த 2005ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. இந்த விதிமுறைகளை பல வீடுகளின் உரிமையாளர்களுக்கும், கட்டுவர்களுக்கும் தெரியவில்லை. டில்லி மெட்ரோபோலிட்டன் நகரில் உள்ள பல வீடுகள் பூகம்பத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2001ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்கு பின், குஜராத் மாநிலம் பூஜ் நகரில் பூகம்பத்தை தாங்கும் வகையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

பூகம்பம் ஏற்படும் அபாயம் இல்லாத பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் லடூர் மாவட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இங்கு கடந்த 1993ம் ஆண்டு, ரிக்டர் அளவில் 6.4 என்ற அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 10 ஆயிரம் பேர் பலியானார்கள். இவர்களில் பலர் பலியானதற்கு காரணம் வீடுகள் இடிந்து விழுந்ததே காரணம்.

இந்த சூழ்நிலையில், பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளது என 38 நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நகரங்களில், பூகம்பத்தை தாங்கும் வகையில் கட்டடம் கட்டப்படவில்லை என கடந்த 2006ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஐ.நா., அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இமய மலை மற்றும் வட இந்தியாவில் பூகம்பத்தினால் பல முறை பாதிக்கப்பட்டுள்ளன.

வருடந்தோறும், இந்திய பகுதியில் உள்ள நில அடுக்கு ஆசியாவின் வடகிழக்கு பகுதியில் 5 செ.மீ., அழுத்தி கொண்டு வருகிறது. இதன் காரணமாக, இந்தியன் மற்றும் யூரேஷியன் நில அடுக்குகள் மோதிக்கொண்டதில், கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக வைத்து ஏற்பட்ட பூகம்பம் காரணமாக 80 ஆயிரம் பேர் பலியானார்கள்.

கடந்த 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர், 2004ம் வருடம், பர்மா நில அடுக்கு நகர்வு காரணமாக, 9.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்பட்டது. இதில் சுமார் 14 நாடுகளை சேர்ந்த 230,000 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 1934ம் வருடம் , எவரெஸ்ட் சிகரத்தில் 10 கி.மீ., மையமாக வைத்து ஏற்பட்ட பூகம்பம் காரணமாக கல்கட்டா, பீகார் மாநிலங்களில் பல கட்டடங்கள் சேதமடைந்தது. இந்த பூகம்பம் சீனாவின் லாசா நகரிலிருந்து மும்பை வரை உணரப்பட்டது. இந்த பூகம்பம், தீண்டாமை கொடுமைக்கு எதிராக இயற்கை கொடுத்த தண்டனை என மகாத்மா காந்தி கூறியிருந்தார்.

-http://www.dinamalar.com

TAGS: