நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு இந்தியா மேற்கொண்ட மீட்புப் பணிகளை பார்த்த அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி கூறுகையில், கடந்த சில வாரங்களாக இந்தியா தனது தலைமைப் பண்பை உலகுக்கு நிரூபித்துள்ளது.
இந்தியப் படைகளின் திறமைகள் எங்களை ஈர்த்துள்ளது. முதலில் ஏமன் மீட்புப் பணிகள், இப்போது நேபாள மீட்புப் பணிகள். இந்தியாவுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவின் செயலாற்றலைக் கண்டு வியந்து நிற்கிறோம்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிலிருந்து அண்மையில் தனது சொந்த மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களையும் இந்தியா திறம்பட காப்பாற்றியிருக்கிறது எனவும் பாராட்டியுள்ளார்.
-http://www.newindianews.com