இந்தியாவின் மீட்பு பணிகளால் பாதுகாப்புக்கு ஆபத்து – சீனா உறவு பாதிப்பாம்: இது நேபாள மாவோயிஸ்டுகள்!

நிலநடுக்க மீட்புப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதால் நேபாள இறையாண்மைக்கு ஆபத்து என்றும் சீனாவுடனான உறவு பாதிக்கும் என்றும் அந்நாட்டு மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.

80 ஆண்டுகளுக்குப் பின்னர் நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கிறது பயங்கர நிலநடுக்கம். தற்போதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 15 ஆயிரத்தையும் தாண்டும் எனக் கூறப்படுகிறது.

Nepal communists see Indian relief as a threat

நிலநடுக்கத்தால் நேபாளம் பேரழிவைச் சந்தித்தது முதல் தற்போது வரை இந்தியாதான் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தான் போன்றவையும் போட்டிக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் நேபாள பிரதமர் கொய்ராலா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மாவோயிஸ்டுகள் தலைவர்கள் புஷ்பா கமல் தஹால், மோகன் பைத்யா மற்றும் நாரயண் மான் பிஜூக்சே ஆகியோர், மீட்புப் பணிகளில் இந்தியாவின் ஆதிக்கம் நேபாளத்தின் இறையாண்மைக்கு ஆபத்தானது என்று எச்சரித்திருக்கின்றனராம்.

இதனால் வெளிநாடுகளின் நிதி உதவிகளைப் பெறுவதற்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருக்கின்றனர். அத்துடன் மீட்புப் பணிகளில் இந்தியாவின் கை ஓங்கி வருவது மற்றொரு எல்லைப் புற நாடான சீனாவுடனான நட்புறவை பாதிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆபத்துக்கு உதவுனா இப்படித்தானா?

-http://tamil.oneindia.com

TAGS: