ஐ.நா: இரண்டாம் உலகப்போரில் வீரர்கள் கூட்டமாக மடிந்தது போல், தீவிரவாதத்திற்கு உலகம் முழுவதும் மக்கள் பலியாகி வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் சக்தியாக தீவிரவாதம் வளர்ந்து வருகிறது என்று ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் பகவந்த் பிஷ்நோய் தெரிவித்தார். இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த நினைவு நாள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் ஐ.நாவுக்கான இந்தியத்தூதர் பகவந்த் பிஷ்நோய் பேசியது, இன்று, மனித சமூதாயத்தை அச்சுறுத்தும் தீய சக்தியாக தீவிரவாதம் உருவாகி இருக்கிறது. தீவிரவாதம் என்பது, உலகையை அச்சுறுத்தும் சக்தியாக மாறி வருகிறது. அதனால், உலக நாடுகளின் ஒன்றினைந்த சக்திகள் மூலமே தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும்.
இரண்டாம் உலகப் போரில், பலநாடுகளின் வீரர்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தனர். அதுபோல், தீவிரவாதத்துக்கு உலகம் முழுவதும் மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக நாம் பல்வேறு வளர்ச்சியை பெற்றிருந்த போதிலும், இன்னும் ஒரு விதத்தில் போர் செய்து கொண்டே இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் போர் மற்றும் ஆயுத மோதல் குறைந்துவிட்டது. ஆனால், அதன் தாக்கம் மக்களிடத்தில் பரவிவிட்டது. 16-ம் நூற்றாண்டில் போரினால் 16 லட்சம் மக்கள் இறந்த நிலையில், 20-ம்நூற்றாண்டில் 11 கோடியாக அதிகரித்துவிட்டது.
உலக நாடுகள் சந்திக்கும் இந்த வேளையை பயனுள்ளதாக்க வேண்டும். உலகப் பாதுகாப்பு கட்டுமானத்திற்கு பற்றாக்குறையான விஷயங்களை கண்டுபிடித்து தீர்க்க வேண்டும். இரண்டாம் உலகப்போரில் இந்தியா 87 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளது. இந்திய ராணுவம் 2 லட்சம் வீரர்கள் என்ற நிலையிலிருந்து தற்போது, 25 லட்சம் வீரர்கள் என்ற அளவாக உயர்ந்துள்ளது. உலகத்திற்கு தன்னார்வமாக அதிக வீரர்களை அனுப்பி வருகிறது என்றார்.
-http://www.dinakaran.com