இனி மைனர் “18” இல்லை… “16” தான்.. சிறார் குற்றவாளிகளுக்கான வயது சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

parliament5-600டெல்லி: கொடும் குற்றத்தில் ஈடுபடும் சிறார் குற்றவாளிகளின் வயதை 18 லிருந்த 16 ஆக குறைப்பது தொடர்பான சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

16 லிருந்த 18 வயது வரை உள்ள சிறுவர்கள் கொடும் குற்றத்தில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது தேசிய குற்ற ஆவண காப்பக அமைப்பின் முலம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்தே இந்த சட்ட திருத்த மசோதாவின் முக்கியத்துவம் கருதி மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, குற்றம் இழைத்தவர் 16 வயதா அல்லத 18 வயதா என சிறார் நிதி ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் போது, உளவியல் மற்றும் சமூக நிபுணர்கள், இருக்க வேண்டும். மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தின் °முலம், மாநில அரசின் சிறார் நீதி சட்டம் 2000 என்பது காலாவதியாகிறது.

இத தவிர, சட்டவிரோத தத்தெடுப்பு, சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, தீவிரவாத அமைப்புகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆகியவற்றைத் தடுக்கவும் சட்ட திருத்த மசோதாவில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

tamil.oneindia.com

TAGS: