விவசாயத்திற்காக விரைவில் ”சிறுநீர் சேமிப்பு திட்டம்”?

plant_001மகாராஷ்டிராவில் விவசாய நிலங்களுக்கு மனிதனின் சிறுநீரை பாசனமாக பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில், பயிர்களுக்கு சிறுநீர் நல்லது என்றும், டெல்லியில் தான் தங்கியுள்ள வீட்டில் கூட செடிகளுக்கு சிறுநீரைத் தான் ஊற்றுவதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு விவசாய ஆராய்ச்சியாளர்களும், கட்காரி கருத்தில் உண்மையுள்ளது என்றும் சிறுநீரிலுள்ள சிலவகை சத்துக்கள், பயிர்களுக்கு உகந்தது என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர விவசாய துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே கூறுகையில், “மராட்டிய மாநிலத்தில் புதிய விவசாய கொள்கை கொண்டுவர உள்ளோம். அதன்படி, பயிர்களுக்கு சிறுநீர் பாசனமும் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மனிதனின் சிறுநீரிலுள்ள சத்துக்களை பயிர்களுக்கு அளித்தால் அவை சிறப்பாக வளரும்.

எனவே, மும்பை போன்ற நகரங்களிலுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மொத்தமாக சேரும் சிறுநீரை, கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களுக்கு வழங்க உள்ளோம்.

மேலும், அமைச்சரவையில், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெற்ற பிறகு மாநிலம் முழுமைக்கும், இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்ரு தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: