சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவை நான் ஆதரிக்கின்றேன். அம்மா மீது வழக்குத் தொடுத்தவர்கள் குற்றமற்றவர்களா.
தர்மம் நிறைந்தவர்களா இவர்கள் மீது எந்த வழக்கும் இல்லாதவர்களா நீதிமன்றத்தையும் மீறி மனச் சாட்சி ஒன்று குறித்து கலைஞர் பேசியிருக்கின்றார். இவரை நம்பியிருந்தவர்களையும் ஈழத்தமிழர்களையும் கண்டும் காணாமலும் கை கழுவிய கலைஞர் அவர்களுக்கு இருக்கிறதா மனசாட்சி என்பதே என்னுடைய கேள்வி அது இல்லாததால் தான் சட்டமன்றத்திலும் சரி பாராளுமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி நீதிமன்றத்திலும் சரி இவர்கள் அடைந்திருக்கிறார்கள் தோல்வி எனத் தெரிவித்தார்.
நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதிமன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது என திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா விடுதலை பற்றி கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.whathits.com
https://youtu.be/RCWt75wGu8Y
இந்த சினிமாக்காரர்களும் அரசியவாதிகளும் ஆதிக்கம் செலுத்தும் வரை தமிழகம் முன்னேற வழியில்லை .