தேர்தலில் வென்று MLA ஆகினால் , கோவிலுக்கு சென்று தேங்காய் உடைப்பது. பெரும் பூஜைகள் செய்வது என்பது இந்தியாவில் தான் நடைபெற்று வருகிறது என்று பார்த்தால் அதனை பிரித்தானியாவிலும் புகுத்திவிட்டார்கள் சில ஆசாமிகள். சமீபத்தில் பிரித்தானியாவில் தேர்தல் நடைபெற்று அதில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றது யாவரும் அறிந்த விடையம். வெற்றிபெற்றதற்காக தாம் விசேட பூஜை ஒன்றை நடத்துவதாக கூறி பிரதமர் டேவிட் கமரூனை கோவிலுக்கு அழைத்துள்ளார்கள் சிலர்.
பிரித்தானிய பிரதமரும் கோவிலுக்குச் சென்று , பூ தட்டை ஏந்தி நின்று பூஜை நடத்தியுள்ளார். உடனே ரிவீட்டரில் அவர் படத்தைப் போட்டு இந்துக்கள் இதுகுறித்து பெருமையடையவேண்டும் என்று சிலர் எழுதியுள்ளார்கள். ஆனால் பிரித்தானியாவில் வாழும் ஒட்டுமொத்த இந்துக்களின் வாக்குகளைப் பெறவே பிரதமர் டேவிட் கமரூன் இவ்வாறு செய்கிறார் என்பது எவருக்குமா புரியவில்லை ?
-http://www.athirvu.com
இந்த காட்சிகள் சமீப தேர்தலின் போது நடந்தவை அல்ல என அங்கே
வாழும் என் உறவினர் தெரிவித்தார் .வாட்ஸ் அப்பில் பதிவேற்றம்
செய்யப்பட்ட இக்காட்சிகள் முன்பு வேறு நிகழ்வின் சமயம் நடந்தவை
என்று அவர் தெரிவித்தார் .
வெள்ளையர்கள் இன்று எவ்வளவோ பரவாயில்லை ,மக்களை
மதிக்கிறார்கள் .
ஆஸ்த்ரேலியா வில் ( கோல்ட் கோஸ்ட் ) நம்மவர்கள் நடத்திய கலை
நிகழ்வுக்கு அங்குள்ள நகர பெரியவரை அழைத்திருந்தார்கள் .
நிகழ்வு நடப்புக்கு அரை மணி நேர முன்னதாகவே வந்து நம்மவர்களை அசத்தி விட்டார் .இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம்
என்று கால தாமதம் பண்ணுவார்களா ?
உலகம் மாற்றத்தில் வளர்ந்து கொண்டிருக்க …நாம் மாறாவிட்டால்
தோற்றுப் போவோம் .