ஈழத்தில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற காலம் 1948ம் ஆண்டு தொடங்கி இரத்த வெறி கொண்ட பேரினவாத சிங்களர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டியமைக்கப்பட்ட இனப்படுகொலையை நடத்தி வந்திருக்கின்றனர். தொடர்ந்த ஒடுக்குமுறைகளும் தமிழர்களின் மீதான கொடூரமான வன்முறைகளும் தனித்தமிழீழத்திற்கான போராட்டத்திற்கு வித்திட்டன.
இதன் விளைவாக மக்களுக்காக போராட விடுதலைப்புலிகளின் என்னும் ஒரு விடுதலை போராட்ட இயக்கம் தமிழீழ தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு தமிழ்மக்களை பாதுகாத்து வந்தது. தனித்தமிழீழம் அமைய இருந்த சூழலில் இதனை பொறுத்துக் கொள்ளாத எதிரிகளும் துரோகிகளும் நம் தமிழ் சொந்தங்களை 2009ம் ஆண்டு மே மாதம் கொத்து குண்டுகளாலும் இரசாயன குண்டுகளாலும் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் மீதும் பாரபட்சம் பார்க்காமல் கொடூரமாக தாக்குதல் நடத்தி கொன்று குவித்தனர்.
இந்த கட்டியமைக்கப்பட்ட இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் தமிழ் உறவுகளை இழந்து நிற்கிறோம். இது நடந்து ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
ஆனால் அதன் ரணங்களையும் வலிகளையும் நாம் மறந்து விடவில்லை. நம் லட்சியமான தனித்தமிழீழம் அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை என்பதை இந்த உலகிற்கு உரக்க சொல்ல மே 17ம் திகதி மாலை 3.30 மணியளவில் மெரினா கடற்கரையில் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபயணத்தில் உணர்வாளரகள் மாணவர்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள உரிமையுடன் அழைக்கின்றோம்.
– மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம்
-http://www.pathivu.com