நேதாஜியின் உடமைகள் கொள்ளை ? நேரு மறைத்தது ஏன் திடுக் தகவல்

Netaji_Subhas_Chandra_Boseபுதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவுக்கு பின்னர் அவர் சேர்த்து வைத்திருந்த தங்க, வைர பொருட்கள் இரும்பு பெட்டியுடன் மாயமானதாகவும், இது குறித்து நேரு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒரு தகவல் தற்போது எழுந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் முறைகேடாக இது கூறப்படுகிறது.

நேதாஜி குறித்த தகவல்கள் அனைத்துமே மர்மமாகவே உள்ளன. அவர் எப்படி இறந்தார் என்பதில் துவங்கி, அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுக்கள் இன்னமும் இருக்கின்றன. இந்நிலையில், நேதாஜியின், தங்கம், வைரம் அடங்கிய பொக்கிஷங்கள் எங்கே என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பெரிய மதிப்பிலான அந்த பொக்கிஷங்கள் 100 கிலோ எடை கொண்ட இரும்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவை மாயமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஜப்பான் தலைநகர் போகநாடு ஏற்கனவே அப்போதைய பிரதமர் நேருக்கு மூன்று முறை தகவல் கொடுத்ததாகவும், ஆனால், நேரு அதை கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை என்றும், அவர் புறக்கணித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. நேருவின் அலட்சியத்தால் அந்த காலத்திலேயே மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது தற்போது வெளியான ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஏன் கண்டு கொள்ளவில்லை ? 1945 போஸ் இறந்த பின்னர் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நேதாஜியின் பொருளாளர் குறித்த தகவல் நேருவுக்கு தெரியும் என்றும், ஆனால் நேரு இதனை ஏன் கண்டு கொள்ளாமல் இருந்தார் என்றும், டோக்கியோவில் இருந்து வந்த அலர்ட்டை நேரு அலட்சியம் செய்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேதாஜி குடும்பத்தினரை நேரு உளவு பார்க்க சொன்னதாக ஒரு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நேதாஜியின் வைரப்பெட்டி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-http://www.dinamalar.com

TAGS: