விபச்சாரத்திற்காக கடத்தப்படும் குழந்தைகள்! பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

children_001டெல்லியில் சமூக விரோத கும்பல்களால் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை டெல்லி பொலிசார் தொடங்கி உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது என வெளியாகி உள்ள புள்ளி விவரம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏப்ரல் 15ம் திகதி நிலவரப்படி இந்த ஆண்டு மட்டும் இதுவரை 2100 குழந்தைகள் காணாமல் போய் உள்ளதாகவும், இவர்களில் சுமார் 1200 பேர் மீட்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மீதம் உள்ளவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்று பொலிசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

படிப்பின் மீதான வெறுப்பு, குடும்ப பிரச்சனைகள், பெற்றோரின் கொடுமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளை வீட்டைவிட்டு காணாமல் போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சுமார் 7,500 குழந்தைகள் காணாமல் போனதாகவும், இவர்களில் சுமார் 5500 பேர் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளை விபச்சார கும்பல்கள் கடத்தி கொண்டு போவதாகவும் அதிர்ச்சி தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

குடிசை பகுதி மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் ஏழை குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் தனி அலுவலர்களை நியமித்து தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து குழந்தைகளை மீட்கும் திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளதாக டெல்லி பொலிசார் அறிவித்துள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: