கோவில் திருவிழாவில் பங்கேற்க தடை – ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் உண்ணாவிரதம்

unnaaவேலூர் மாவட்டம், மாதனூர் அடுத்த ஆசணாம்பட்டு கிராமத்தில் பல சாதியினரும் உள்ளனர். இங்குள்ள ஸ்ரீதேசத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல ஆண்டுகாலமாக அனைத்து மக்களும் கலந்துக்கொண்ட விழாவாக நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான திருவிழாவில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள் கலந்துக்கொள்ள கூடாது என இந்து ஆதிக்கசாதியினர் பஞ்சாயத்தினர் உத்தரவு போட்டுள்ளனர்.

இதனை கண்டித்து ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூக பெண்கள் ஊரில் பந்தல் அமைத்து வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோயில் திருவிழாவில் தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் இதுப்பற்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து ஒதுக்கிவைக்கப்பட்ட எங்களை கோவில் திருவிழாவில் கலந்துக்கொள்ள வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

-http://www.nakkheeran.in

– ராஜா
TAGS: