நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நாளை (24-05-15),ஞாயிற்றுக்கிழமை திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 10 மணிவரை நடைபெறுகிறது. உலகம் முழுக்க இருந்தும் இந்த மாநாட்டிற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கு சுமார் 2 இலட்சம் பேர்வரை திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடானது தமிழன் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.
-http://naamtamilar.org



























அண்ணன் சீமான் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சிக்கும் எங்களது வாழ்த்துகள்.
மதுரையில் தி மு க மா நாடு நடக்கிறது. இது எதிர் பாராததா?
திருச்சில் இனவுணர்வு தமிழ்ரத்தம்
பொங்கி வழியட்டும்.செம்பருத்திக்கு
நன்றிகள்!;
இது வரை ஒரு கட்சியின்
மாநில மாநாடு நடக்கும் போதோ
அந்த கட்சியின் முதல்
கன்னி மாநில மாநாடு நடக்கும்
போதோ அதே நாளில் மாற்று கட்சியின்
மாநாட்டிற்கு தமிழகத்தில்
அனுமதி இதுவரை கொடுத்ததே இல்லை..
காரணம்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை
போக்குவரத்து இடையூறு
மக்கள் நெருக்கம்,
பொதுமக்கள் இடையூறு.
திருச்சியில் மாநாடு நடத்த
ஒரு வருடத்திற்கு முன்பே
அறிவித்து அதனை நோக்கி
பயணித்து, ஆறு ஆண்டுகளாக
இந்த ஒரு நாளை முதனமையாக
வைத்தே தெரு தெருவாக
ஊர் ஊராக மாவட்டம் மாவட்டமாக
நாம் தமிழர் கட்சி பயணித்து..
எப்படியாவது எம் தமிழ் மக்களுக்கு
இனமான உணர்வை தட்டி
எழுப்பி தமிழ் தேசிய
நீரோடையில் தமிழ் மக்களை
கலந்துவிட வேண்டும்,
என்று அல்லும் பகலும்
உழைத்தது நாம் தமிழர் கட்சி
அவச அவசரமாக
திமுக மே 26 அன்று ஒரு மாநாட்டை
நடத்த அனுமதி வாங்கியது.
பிறகு அது 25 அன்று குழப்பி
இப்போது தமிழர் இன எழுச்சி மாநாடு நடக்கும்
மே 24 என்று காவல் துறையிடம்
அனுமதி வாங்கி இருக்கிறது..
கருணாநிதி என்ற தெலுங்கர்
எப்போதுமே தமிழர்களின்
இனவுணர்வு எழுகிறதோ
அதை அப்படியே நீர்த்துபோக
செய்யகூடிய சகுனி வேலையை
மிக நன்றாக செய்வார், அதனால்
தான் அவர் இத்தனை ஆண்டுகளாக
தமிழர் தலையில் மிளகாய்
அறைக்கமுடிந்தது..
நாம் தமிழர் கட்சி இன எழுச்சி
மாநாட்டை நடத்துவது
என்றதும் அதன் தடைகள்
அரசாலும் துரோக மற்றும்
காவி அமைப்புகளாலும் எப்படியெல்லாம்
புகார் தரப்பட்டு இறுதி மாதம் வரை
என்று என்றே உறுதி செய்ய படமுடியாத
ஒரு இக்கட்டான நிலையில்
இந்த அரசு செயல் பட்டதை
மறந்துவிட முடியாது..
ஆனால்
திமுகவுக்கு இப்படி அனுமதி
கொடுத்தது சட்டம் ஒழுங்கு
பிரச்னையை ஏற்படுத்தாதா ?
ஒரு பேரியக்கம் இன்று
சுருங்கி கோஷ்டி இயக்கமாக
போய் இருக்கும் இந்த வேளையில்
திமுக மாநாட்டு அனுமதி என்பது
எதை மையபடுத்தி கொடுக்க
பட்டது என்ற சந்தேகம் மிக
அதிகமாகவே வருகிறது..
ஒரே நாளில் ஒரு கட்சி
திருச்சியில் மாநாடு
அதே நாளில் மதுரையில்
மற்றொரு கட்சிக்கு அனுமதி..
யாரை பழிவாங்க இந்த அனுமதி
இறுதிவரை தமிழர் இனம்
இந்த மண்ணில் எழவே
கூடாது என்ற நினைப்பில்
இரண்டு திராவிட கட்சிகளும்
செயல்படுவதை நன்றாக அறிய
முடிகிறது,
திட்டமிட்ட கலவரத்தை ஏற்படுத்த
திமுக அல்ல கைகள் முயலுமானால்
அதனால் பாதிக்க பட போவது
நாம் தமிழர் இன எழுச்சி
மாநாடு தான் நாம நன்றாக
குளிர் காயலாம் என்று அதிமுக
அரசு நினைப்பது , திமுக மாநாட்டிற்கு
அனுமதித்ததன் மூலம் அறியமுடிகிறது..
அதுபோல கருணா நிதியும்
இன எழுச்சி மாநாட்டை
பற்றிய செய்திகளை ஊடகங்கள்
பரப்பாத வண்ணம் தனது
மாநாட்டை நடத்துறது
அப்பட்டமான இன எழுச்சி
மாநாட்டுக்கு எதிரான மீண்டும்
ஒரு வரலாற்று துரோகத்தை
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்துகிறார்..
ஆனால்
நிகழபோவது என்ன என்று
ஊகிக்க முடியாத வண்ணம்
திருச்சியை நோக்கி தமிழர்கள்
தயாராகி கொண்டு இருப்பது
ஆளும் கட்சிகளுக்கும்
எதிர் கட்சிகளுக்கும்
கிளி ஏற்படுத்துகிறது
என்பது மட்டுமே உண்மை…
வீழ்ந்த தமிழன்
திருச்சியில் எழுவான்..
திராவிடம் வீழும்
ஆரிய பகை முடிக்கும்
களத்தை செம்மையாக
காளையே புறப்படு
திருச்சி உனக்காக காத்திருக்கு..
நன்றி தோழர் .