பழனியை சேர்ந்த பார்வையற்ற மாணவனின் சாதனை கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பழனியை அடுத்துள்ள பாறைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகன் ஸ்ரீ ராமானுஜம் (10), பார்வையற்றோர் தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும் என்று அந்த சிறுவனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது.
30 நிமிட செய்தியை கேட்டுவிட்டு அதை அச்சு பிசகாமல் திருப்பி பேசிக் காட்டும் ராமானுஜத்தின் திறமையை கேள்விப்பட்ட தனியார் தொலைக்காட்சி சிறுவனுக்கு வாய்ப்பளிக்க விரும்பியுள்ளது.
இதையடுத்து, ப்ரெய்லி முறையில் செய்தி தயார் செய்து கொடுத்து அதை தடவிப்பார்த்து படித்துக் கொண்டே கமெராவை பார்க்க பயிற்சி அளித்துள்ளனர்.
இந்த பயிற்சிக்கு பிறகு தற்பொது அந்த சிறுவனை செய்தி வாசிப்பாளராக்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது ராமானுஜனின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-http://www.newindianews.com



























அற்புதம்
குறையில் நிறை.