இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய தமிழர்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு கூடியுள்ளனர்

seeman_03திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு ஞாயிற்றுக்கிழைமை மாலை நடைபெற்றது.

மாநாட்டில் பேசிய சீமான், இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய மக்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு  கூடியுள்ளனர். மாற்று அரசியல் புரட்சியை முன்வைக்கிறோம். ஈழம் விடுதலை ஒன்று தான் வாழ்நாள் இலக்கு. தமிழ் தேசிய இனத்திற்கு என ஒரு தேசம். அதனை அடைவதற்கான  தொடக்கம் தான் 2016 தேர்தல்.

தமிழர்களுக்கு என்று அதிகாரம் இல்லை. அதனால் தான் அன்டை நாட்டில் நமது  மீனவர்கள், அன்டை மாநிலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

இலங்கையில் நடந்த இனஅழிப்பை திமுக, அதிமுக தடுக்கவில்லை. தமிழர்களை காக்கவில்லை.

தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆள்மாற்றம் நடக்கிறது. ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஊழல், லஞ்சம், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தனியார் மயம், இவைகள் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லா அரசுகளுக்கும் பொதுவானது.

எனவே தான் தனித்து நிற்க முடிவேடுத்தோம். தேசிய அரசியல் கட்சிகளுடனும், திராவிட அரசியல் கட்சிகளுடனும் ஒருபோதும் கூட்டணி கிடையாது.

சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது திட்டமிட்ட இன படுகொலை நடத்தியது. இதனை கண்டித்து அதிமுக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தனி தமிழ் ஈழ சோசலிச குடியரசு அமையவேண்டும். தனி ஈழம் மட்டும் தான் இந்தியவின் பாதுகாப்புக்கு ஏற்றது

2016 தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு. 234 தொகுதி களிலும் நமது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இவ்வாறு பேசினார்.

-http://www.nakkheeran.in


பிரபாகரனின் பதாகையை பார்த்து கண் கலங்கிய மக்கள்!

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டு நிகழ்வில் முதலாவதாக ஆதி தமிழர் கலைநிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.

ஏராளமான மக்கள் வரிசையாக மாநாட்டு திடலில் வந்தமர்ந்து கொண்டிருந்த வேளையில் பிரபாகரனின் பதாகையை ஒரு சில இளைஞர்கள் மாநாட்டு மைதானத்திற்கு எடுத்து வந்தனர்.

அவ்வேளையில்  அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்தார்கள்.

சில உணர்வாளர்கள் தங்களையும் மீறி கண்களில் வழிந்த கண்ணீரையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பரித்தது. கூடியிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. அதனை பார்த்த சீமானும் கண் கலங்கி கைதட்டினார்.

-http://www.tamilwin.com

TAGS: