இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசு

mahinda_amaraweera_001இலங்கையின் கடற்பரப்பில் வருடத்தில் 65 நாட்கள் மீன்பிடிக்க, இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை இன்று காலி துறைமுகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

65 நாட்களல்ல 65 மணித்தியாலங்களை கூட இந்தியாவுக்கு விட்டு தர முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை பெரிதாக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தப்பிரச்சினை இரண்டு நாட்டு மீனவர்களினதும் வாழ்வதார பிரச்சினையாகும். எனவே இதற்கு நீண்டகால தீர்வு ஒன்று அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

இந்திய மீனவர்கள் 65 மணி நேரம் கூட மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது: இலங்கை

இந்திய மீனவர்களை ஓர் ஆண்டின் 65 நாள்கள் மட்டும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது.

இதுகுறித்து அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா கூறியதாவது:

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் ஆண்டுக்கு 65 நாள்கள் மட்டும் மீன் பிடிப்பதன் மூலம் மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் அதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் இந்தியா கோரியிருந்தது. ஆனால், இந்திய கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் ஆண்டின் 65 நாள்கள் அல்ல, 65 மணி நேரம் கூட மீன்பிடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று மகிந்த அமரவீரா காட்டமாக பதிலளித்துள்ளார்.

நீண்ட காலமாக இரு நாடுகளுகக்கிடையே இருந்து வரும் மீனவர் பிரச்னையைத் தீர்க்க இரு நாட்டு மீனவ அமைப்புகளும் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

இரு தரப்பு மீனவர்களும் இது தங்களது வாழ்வாதாரப் பிரச்னை என்றும் விரைவில் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மார்ச் மாதம் இலங்கைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறீசேனாவிடம், மீனவர்களின் பிரச்னைக்கு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

-http://www.dinamani.com

TAGS: