ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க நீதிமன்றத்தில் மீண்டும் மனு

rss-logoஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கக் கோரி சீக்கியர் அமைப்பு சார்பில், அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் மீண்டும் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக தொடுத்த வழக்கை நியூயார்க் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்துவிட்டது.

இந்நிலையில், இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மேற்கொண்ட கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்பட்ட மைக்கேல் மேசி, ஹசீம் அலி, குல்வீந்தர் சிங் ஆகிய மூன்று பேர், சம்பந்தப்பட்ட சீக்கிய நீதி அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டதற்கான உரிய ஆதாரங்களுடன் சீக்கிய நீதி அமைப்பு சார்பில் திருத்தப்பட்ட புதிய மனு, நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

மனு விவரம்:
2014-ஆம் ஆண்டு இந்தியாவில் பாஜக அரசு அமைந்தது. அது முதல், பாஜகவின் வழிகாட்டியாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் மதமாற்ற நிகழ்வுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் குறைந்தபட்சம் 4,000 கிறிஸ்தவக் குடும்பங்களையும், 1,000 இஸ்லாமியக் குடும்பங்களையும் மதமாற்றம் செய்யும் திட்டத்தை பல்வேறு ஹிந்து அமைப்புகள் அறிவித்துள்ளதாக அமெரிக்காவின் மதச் சுதந்திரத்துக்கான சர்வதேச ஆணையம் சார்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே, ஆர்எஸ்எஸ்ûஸ வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: