ராமர் கோயில் குறித்து சரியான நேரத்தில் முடிவெடுப்போம்: சொல்வது அமித்ஷா

amit-shahசூரத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

குஜராத்தின் சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ராமர் கோயில் விவகாரத்தில் நாங்கள் பின்வாங்கவில்லை. இது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும்.

ராமர் கோயில் விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதில் தீர்ப்பு எப்போது வருகிறதோ அதனடிப்படையில் முடிவெடுக்கப்படும். நாங்கள் தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் தீர்ப்பை மதிக்க வேண்டும். ராமர் கோயில் கட்டப்படுவது குறித்து அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதும் ஒரு தீர்வாக நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம்.

நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் முடிவும் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நாங்கள் இல்லை. அரசியல் சாசனம் 370-வது பிரிவு ஜம்மு காஷ்மீர் பற்றியது மட்டுமல்ல, அதற்கு பெரும்பான்மை முக்கியம். லோக்சபாவில் பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இருந்தாலும் அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இது போதாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

http://tamil.oneindia.com

TAGS: