புறாவை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார்!

pak_pigeon_002பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் காஷ்மீரில் உளவு பார்க்க புறாவினை அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பதன் கோட் அருகில் ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, ஒரு புறா வந்து இறங்கியுள்ளது.

அந்த புறாவின் இறகுகளில் எழுத்துக்கள் இருப்பதை ரமேஷ்சந்திரா பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார்.

உடனே இது தொடர்பாக அவர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தகவல் அளித்ததால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பதன்கோட் பொலிசார் ரமேஷ்சந்திரா வீட்டுக்கு சென்று அந்தப் புறாவைப் பிடித்துள்ளனர்.

வெள்ளை நிறம் கொண்ட அந்தப் புறாவின் இறகுகளில், உருது மற்றும் ஆங்கிலத்தில் வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்ததோடு, புறாவின் ஒரு இறக்குக்குள் செல்போன் எண் ஒன்றும் இருந்துள்ளது.

விசாரணையில், அந்த எண் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவல் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருடையது என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த புறாவை ஸ்கேன் செய்து பார்த்த பொலிசார், அதன் முடிவு வெளியிடவில்லை.

புறா உடலுக்குள் ரகசிய கருவிகள் வைத்து காஷ்மீரில் உள்ள தங்கள் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது பதன் கோட் பொலிசார் அந்தப் புறாவைத் தாங்கள் பொறுப்பில் வைத்துள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: