6 குழந்தைகளையும் கருணைக் கொலை செய்ய வேண்டும்: அனுமதி கோரும் பெற்றோர்

euthanasia_001டெல்லியில் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் 6 குழந்தைகளையும் கருணை கொலை செய்ய பெற்றோர் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவை சேர்ந்த மொகமத் நசீர் (42) அங்குள்ள ஒரு பலகார கடையில் வேலைபார்த்து வருகிறார்.

இவரது 6 குழந்தைகளும் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையிலும், தங்களை தாங்களே கவனித்து கொள்ள இயலாத மனநிலையோடும் உள்ளனர்.

அந்த 6 குழந்தைகளின் வயது, 6 முதல் 18 வயது வரை உள்ளது.

இந்நிலையில், நசீர் மற்றும் அவரது மனைவி தங்கள் 6 குழந்தைகளையும் கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவி செய்ய பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

நசீர் இதுபற்றி கூறுகையில், பிறக்கும் போது ஆரோக்கியமாக பிறந்த எனது குழந்தைகள், 4 அல்லது 5 வயதில் உடலநிலையில் சரி இல்லாமல் பலவீனமானவர்களாக மாறினார்கள்.

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கபட்டு எழுந்து நடக்க கூட முடியாத எனது குழந்தைகளுக்கு எனது வருமானத்தால் சிகிச்சை அளிக்க முடியவில்லை.

நான் குழந்தைகளை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

கருணை கொலை செய்ய கூடாது எனில் பிரதமர் மோடி மருத்துவ உதவி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

தாயார் கூறுகையில், எங்கள் குழந்தைகளால் தங்கள் உணவைக்கூட சுயமாக எடுத்து உண்ண முடியவில்லை.

குடும்பத்தை கவனிக்கவே பெரிய பாடாக உள்ள நிலையில், அவர்களின் சிகிச்சைக்கும் எங்களால் செலவிட முடியவில்லை.

மேலும், எங்களுக்கு பொருளாதார நிலை சரியில்லாத நிலையினால் தான் நாங்கள் கருணை கொலை செய்ய அனுமதி கேட்கிறோம் என்று கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: