மியான்மரில் பதுங்கியிருந்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகள் 50 பேரை, சுட்டு வீழ்த்தி களையெடுத்துள்ளது இந்திய ராணுவம். எல்லை தாண்டி இந்திய ராணுவம் நடத்திய இந்த தீரம்மிக்க தாக்குதல் பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.
இந்நிலையில் இயல்பாகவே, இந்திய குடிமக்களுக்கு ஒரு சந்தேகம் எழுவது இயல்பே. இதேபோன்ற தாக்குதலை பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்தி தீவிரவாதிகளை ஒழிக்க முடியாதா என்பதே அந்த சந்தேகம். பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்துவது என்பது, முற்றிலும் வித்தியாசமான ஒரு நடவடிக்கை என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.
இதற்கு முதல் காரணம், பாகிஸ்தான் நமது எதிரி நாடு. மியான்மர் நட்பு நாடு. மேலும் சிலர், பாகிஸ்தான் அணு ஆயுத நாடு என்பதே இந்தியாவின் தயக்கத்திற்கு காரணம் என்று கூறக்கூடும்.
ஆனால், ‘ஒன்இந்தியாவிடம்’ பேசிய ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் பி.கே.பாண்டே இதை மறுக்கிறார். பாகிஸ்தான் எதிரிநாடு என்பதே இந்தியாவின் தயக்கத்திற்கு காரணம் என்றார் அவர். இதுகுறித்து பி.கே.பாண்டே அளித்த பிரத்யேக பேட்டி விவரம்:
கே: மியான்மர் ஆபரேசன் பற்றிய உங்கள் கருத்து?
ப: மியான்மர் எல்லையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து நாச வேலைகளில் ஈடுபடுவது இது புதிது கிடையாது. கடந்த 20 ஆண்டுகளாக இப்படியான தாக்குதல்களை பார்த்துள்ளோம். ஆனால், வழக்கமாக இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது கிடையாது.
கே: மியான்மர் அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறதா?
ப: இந்த தீவிரவாதிகளுக்கு மியான்மர் அரசு ஆதரவு அளிப்பதில்லை. சொல்லப்போனால், சீனாதான் இதற்கு ஆதரவு கொடுக்கிறது. சீனாவுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்பதால் மியான்மர் அரசு வாயை மூடி மவுனமாக இருப்பது கட்டாயமாகிவிட்டது. ஆனால், இந்தியாவின் எதிர் நடவடிக்கைக்கு மியான்மர் மறுப்பு தெரிவிக்கவில்லை. தீவிரவாதிகள் தங்கள் மண்ணில் பதுங்கியிருப்பதில் மியான்மருக்கு சம்மதம் இல்லை என்றபோதிலும், சீனாவை எதிர்த்து அந்த நாடால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இந்தியா பதிலடி கொடுக்கும்போதும், பேசாமல் இருப்பதே நல்லது என்று மியான்மர் கருதுகிறது.
கே: தீவிரவாதிகளால் இந்திய ராணுவத்தினர் 18 பேர் கொல்லப்பட்டது பற்றி?
ப: மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் இருந்து ராணுவம் பாடம் கற்க வேண்டியுள்ளது. அன்றைய தாக்குதலில் ராணுவம் முற்றாக, எதிர்தாக்குதல் நடத்த முடியாத நிலையில் இருந்தது. உளவுத்துறையின் தோல்விதான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு காரணம்.
கே: பாகிஸ்தானிலும், இந்தியா புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாட முடியுமா?
ப: பாகிஸ்தான் எல்லையிலும், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து தாக்கவில்லை என்றபோதிலும், இங்கிருந்து மறுமுனை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆனால், பாகிஸ்தானுக்குள் ராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்த முடியாது. பாகிஸ்தான் நமது எதிரி நாடு. மியான்மர் நட்பு நாடு. எதிரி நாட்டுக்குள் ராணுவத்தை அனுப்பினால், அது போரில் சென்று முடியலாம்.
கே: பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது இந்தியாவின் தயக்கத்திற்கு காரணமா?
ப: பாகிஸ்தான் தனது அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என்று நினைக்கவில்லை. ஏனெனில், கதிர்வீச்சு, பாகிஸ்தானையும் சேர்த்தே பாதிக்கும். அணு ஆயுதத்தால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். பாகிஸ்தான் டெல்லியை குறிவைத்து அணு ஆயுதத்தை பிரயோகிக்கும் என்று நினைக்கிறீர்களா.. உலக வல்லரசு நாடுகள் அனைத்தின் தூதர்களும் டெல்லியிலுள்ளனர். பாகிஸ்தான் அதன்பிறகு என்ன ஆகும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுதம் போகக்கூடாதவர்கள் கைகளுக்கு போனால், மேற்கத்திய நாடுகள்தான் இலக்காக தாக்கப்படும் ஆபத்துள்ளது.
தயிரியம் இருந்தால் பாகிஸ்தான் மீது கை வைத்து பார்
அப்படி ஒரு சம்பவம் நடக்க வில்லையென்று மியன்மார் அரசாங்கம் தகவல் தெரிவித்து உள்ளது.அந்த செய்தி இந்திய ஊடகங்களின் பொய் தகவல். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்திற்கு ஏணியை போட்ட கதைதான் இவங்க (இந்திய) கதை.