இந்தியாவைப் பார்த்து மிரண்டு போயுள்ளது பாகிஸ்தான்: பாரிக்கர்

மியான்மர் எல்லையில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலைப் பார்த்து பாகிஸ்தான் மிரண்டு போயுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிய மாற்றமல்ல, மிகப்பெரிய மாற்றம். கடந்த 2 – 3 நாட்களிலேயே அது நன்கு தெரிந்திருக்கும். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவுக்கும் ஊடுருவல் முயற்சிக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஒரு சிறிய நடவடிக்கையே இவ்வளவு பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

மேலும், மியான்மர் தாக்குதல் குறித்து விரிவாகப் பேச மறுத்துவிட்ட பாரிக்கர், இந்தியாவின் புதிய அணுகுமுறையால் சிலர் பயந்துபோயுள்ளனர். அவர்களது நடவடிக்கையிலும் மாற்றம் தெரிகிறது என்று கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: